கருப்பு தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை வந்திருக்கும் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

Suriya Karuppu
By Parthiban A May 19, 2026 02:39 PM GMT
Report

சூர்யாவின் கருப்பு படத்தை ரசிகர்கள் வெறித்தனமாக தியேட்டர்களில் கொண்டாடி வருகிறார்கள். திரையில் கருப்பசாமியை பார்த்து ரசிகர்களும் தியேட்டர்களில் பரவசமாகி ஆடுவதும் நடக்கிறது. அந்த வீடியோக்கள் அதிகம் இணையத்தில் வைரல் ஆகின்றன.

அப்படி பரவசம் ஆகுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் என சூர்யா நேற்று கோரிக்கை வைத்து இருந்தார்.

கருப்பு தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை வந்திருக்கும் வசூல்.. அதிகாரபூர்வ அறிவிப்பு | Karuppu Box Office 80 Crs Gross In Tn Alone

தமிழ்நாடு வசூல்

தற்போது தமிழ்நாட்டில் மட்டும் கருப்பு படம் ரூ.80 கோடி வசூல் என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்து இருக்கிறது.

அதை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர். விரைவில் 100 கோடி வசூலை கருப்பு தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த வசூல் ஏற்கனவே 150 கோடி ரூபாயை கடந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Gallery