ஓய் பொண்டாட்டி!! 2வது மனைவி வெளியிட்ட வீடியோவால் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்..

Cooku with Comali Gossip Today Madhampatty Rangaraj
By Edward Aug 31, 2025 12:30 PM GMT
Report

ஜாய் கிரிஸில்டா

மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவி ஸ்ருதி மற்றும் இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஜாய் கிரிஸில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறி திருமண புகைப்படத்தை வெளியிட்டார். விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாம் திருமணம் செய்தார் என்ற கேள்வி எழுந்தது.

ஓய் பொண்டாட்டி!! 2வது மனைவி வெளியிட்ட வீடியோவால் சிக்கிய மாதம்பட்டி ரங்கராஜ்.. | Madhambatti Rangaraj S Video Shared Joy Crizildaa

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி திருமணம் செய்தார் என்றும் என்னுடைய கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் தான். எனக்காகவும் என் குழந்தைக்காகவும் நான் வழக்கு பதிவு செய்திருக்கிறேன் என் குழந்தைக்கு அவர் தான் அப்பா என்று கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

நானும் அவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டி, இருப்பதாகவும் முதல் மனைவியுடன் judicial separationல் இருப்பதாகவும் கூறியதால் திருமணம் செய்தேன். ஆனால் இப்போது அவர் என்னை நிராகரித்து வருகிறார். நான் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று பேசியுள்ளார் ஜாய் கிரிஸில்டா.

ஓய் பொண்டாட்டி

இதனையடுத்து ஜாய் கிரிஸில்டாவின் டிவிட்டர் பக்கத்தில் மாதம்பட்டி அனுப்பிய வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். அந்த வீடியோவில், ஓய் பொண்டாட்டி என்னடி பன்ற, ஐ மிஸ் யூ, ஐ லவ் யூ என்று பேசியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.