அப்பா, அம்மாக்கு தெரியாதா திருமணம் பண்ணா, தனுஷ் அப்பாவின் சர்ச்சை பேச்சு
Dhanush
By Tony
தனுஷ் இன்று இந்திய சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். அதே போல் செல்வராகவன் இன்று தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனராக இருப்பவர்.
இந்நிலையில் இவர்களின் தந்தை மற்றும் இயக்குனராக கஸ்தூரி ராஜா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், கவின் ஆணவக்கொ* நடக்க முக்கிய காரணம் காதல் தான், படிக்க சென்றால் படியுங்கள், வேலைக்கு சென்றால் வேலையை செய்யுங்கள்.

காதல் செய்யாதீர்கள், பெற்றவர்களுக்கு தெரியும் எப்போது திருமணம் செய்ய வேண்டும் என்று, அதனால் படிக்கின்ற வயதில் காதல் செய்யாதீர்கள் என பேசியது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.
ஏனெனில் அவருடைய மகன்கள் இருவருமே காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.