குடுத்துவெச்சவன்யா.. கத்ரீனா கைப் - விக்கி கௌஷல் திருமணம் பற்றி வந்த ஷாக்கிங் நியூஸ்

Katrina Kaif Vicky Kaushal Wedding
By Parthiban.A Dec 09, 2021 10:30 AM GMT
Report

தற்போது ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் அதிகம் பரபரப்பாக பேசப்படும் விஷயம் தான் கத்ரினா கைப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம். ராஜஸ்தானில் ஒரு கோட்டையில் இந்த ராயல் வெட்டிங் நடைபெறுகிறது.

விருந்தினர்கள் யாரும் செல்போன் கொண்டு வரா கூடாது என்கிற கட்டுப்பாட்டுடன் மிக ரகசியமாக நடக்கும் திருமண விழாவின் ஒளிபரப்பு உரிமையை மிகப்பெரிய தொகைக்கு விற்று இருக்கிறார்கள்.

அது மட்டுமின்றி திருமணம் நடைபெறும் இடத்திற்கும் வாடகை இல்லை, அதன் உரிமையாளர் கத்ரினா கைப் திருமணம் என்றதும் இலவசமாக கொடுத்து இருக்கிறார். மேலும் மற்ற ஏற்பாடுகளுக்கான செலவு மொத்தத்தையும் கத்ரீனா தான் செய்து வருகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்பாடுகள் அனைத்தையும் அவர் தான் பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் குடுத்துவெச்சவன்யா விக்கி கௌஷல் என கமெண்ட் செய்து வருகின்றனர். கத்ரீனாவை விட விக்கி கௌஷல் ஐந்து வயது குறைவானவர் என்பது கூடுதல் தகவல்.