மாஸ்க் பட 3வது நாள் வசூல்!! வீட்டை மீட்பாரா நடிகை ஆண்ட்ரியா..
மாஸ்க்
நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஆண்ட்ரியா, தற்போது தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார். கவின் நடிப்பில் உருவாகி வெளியான மாஸ்க் படத்தில் நடித்தும் படத்தை தயாரித்தும் இருக்கிறார் ஆண்ட்ரியா.

படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், கவின், ஆண்ட்ரியாவை தாண்டி சார்லிக்கு நல்ல ஸ்கோப் உள்ள மாஸ்க் படம் கடைசிவரை ரசிகர்களை என்கேஜிங் ஆகவே கொண்டு சென்றிருக்கிறதாம்.
3வது நாள் வசூல்
வெளியான முதல் நாளான வெள்ளிக்கிழமை ரூ. 1.5 கோடி வசூலை அள்ளியது. அடுத்த நாள் 2வது நாளான சனிக்கிழமை 1.45 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை 1.35 கோடி ரூபாயும் ஈட்டியிருக்கிறது. ஆக மொத்தம் 3 நாட்களில் மாஸ்க் படம் 3.95 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது.

இப்படத்தினை தன்னுடைய வீட்டை அடமானம் வைத்து படத்தை தயாரித்துள்ளேன் என்று நடிகை ஆண்டிரியா கூறியதால், வீட்டை மீட்டுவிடுவாரா? இல்லை? அப்போதானா? என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள்.