ஒரு படம் ஹிட்டு, அதுக்குள்ள இவ்ளோ கோடி சம்பளமா, ஆள விடுப்பா என எகிறிய கம்பெனி
Kavin
Tamil Actors
By Tony
கவின் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரை வந்து ஹிட் அடித்த நடிகர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த டாடா படம் மெகா ஹிட் ஆனது.
இதனாலேயே கவின் செம்ம சந்தோஷத்தில் இருக்க, தற்போது சிவகார்த்திகேயன் போல் ஆகவேண்டும் என்று திட்டம் போட்டுவிட்டார்.
அதனாலேயே, அவர் பாணியில் பெரிய இசையமைப்பாளர், பெரிய நடிகை என கமிட் செய்ய முயற்சிக்கின்றார்.
இந்நிலையில் கவினை வைத்து ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க ஒரு கோடி சம்பளம் பேசியுள்ளனர்.
ஆனால், தற்போது டாடா ஹிட் ஆக, கவின் சம்பளமாக 2 கோடி கேட்கின்றாராம்.
அந்த தயாரிப்பு நிறுவனமோ, அவ்வளவு தான் முடியாது, ஆள விடுப்பா என்று கிளம்பிவிட்டார்களாம்.