கீர்த்தி சுரேஷா இது? இதுவரை பார்க்காத போட்டோஷூட்டுக்கு இறங்கி இப்படியொரு பார்வையில் போஸ்
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள வாரிசு நடிகையாக அறிமுகமாகி வாரிசு நடிகருடன் நடித்து பிரபலமானார். அதன்பின் ரஜினிமுருகன் படத்தில் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க ஆரம்பித்து சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.
இதனை அடுத்து தமிழ், மலையாளம், தெலுங்கு என நடித்து வரும் கீர்த்தி சமீபத்தில் நடித்த பாதி படங்கள் தோல்வியை தழுவியது. அவர் நடித்த மகாநடி படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து அவருக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது.
கோடியில் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக அதுவும் குடும்ப பாங்கான நடிகை என்ற கலையில் இருந்த கீர்த்தி அக்கடதேசத்து படத்திற்காக சமீபகாலமாக க்ளாமர் ரூட்டினை பிடித்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்த காரணத்தால் ரசிகர்களை எப்படியாவது கவர வேண்டும் என்பதற்காக க்ளாமர் போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்து வருகிறார். தற்போது பனியனில் எடுத்த காந்த பார்வை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.