கிடைச்ச ஒரே ஒரு வாய்ப்பு.. அவருக்காக பொன்னியின் செல்வன்-ஐ தூக்கிப்போட்ட கீர்த்தி சுரேஷ்..
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமான கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு சினிமாவின் இருக்கும் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆர்ம்பித்தார்.

கோடியில் சம்பளம்
2015ல் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் வெறும் 7 வருடத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
ஆனால், சாணிக்காயிதம், மகாநதி போன்ற படங்களை தவிர்த்து கீர்த்தி சுரேஷ் நடித்த பல படங்கள் தோல்வியை பெற்று வந்தது. சர்கார், பைரவா, சாமி 2, சண்டைக்கோழி, பாம்புசண்டை, தானா சேர்ந்த கூட்டம், அண்ணாத்தே உள்ளிட்ட பல படங்கள் தமிழில் படுதோல்வியை அடைந்தது.
இதனால் கீர்த்தி சுரேஷ் ராசி இல்லாத நடிகை என்ற பெயரையும் பெற்று வந்தார். சமீத்தில் கூட சர்க்கார் வாரிப்பாட்டா படம் படுதோல்வியடைந்து விமர்சனத்திற்குள்ளாகினார்.
பொன்னியின் செல்வன் குந்தவை
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் முதலில் மணிரத்னம் கீர்த்தி சுரேஷிடம் தான் கால்ஷீட் கேட்டுள்ளாராம். ஆனால் என்னால் முடியாது என்று கூறியிருக்கிறார் கீர்த்தி.
இதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தது தான் காரணமாம். ஆனால் அண்ணாத்த படம் படுதோல்வியடைந்து கீர்த்தி சுரேஷின் தமிழ் கேரியரை டேமேஜ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.