நடிச்சது பூரா ஃபிளாப் படம்!! வாய்ப்பில்லாமல் விளம்பரமே கதியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்..

Keerthy Suresh Gossip Today Indian Actress
By Edward Jan 20, 2023 12:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய மலையாள நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படம் பெரிய வெற்றியை கொடுக்காததால் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் தமிழ், மலையாள, தெலுங்கு மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாகவும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாக்வும் திகழ்ந்து வருகிறார்.

நடிச்சது பூரா ஃபிளாப் படம்!! வாய்ப்பில்லாமல் விளம்பரமே கதியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்.. | Keerthy Suresh New Root For Chance Advertisement

ஆனால் அவர் நடித்த சமீபத்திய படங்களில் மகாநதி மற்றும் சாணி காயிதம் படம் மட்டுமே பேசப்பட்ட படமாக அமைந்தது. மற்ற படங்கள் படுதோல்வியை கொடுத்து கீர்த்தி சுரேஷின் மார்க்கெட்டை கெடுத்தது.

இதனால் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பக்கம் தாவி அடுத்தடுத்த நடிகைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் கமிட்டாகி வருகிறார். அதேசமயம் விளம்பர படங்களில் நடித்தும் காசு பார்த்து வருகிறார். இதனை பலர் இப்படியாகிவிட்டதே என்று கலாய்த்தும் வருகிறார்கள்.