கீர்த்தி சுரேஷுடன் இந்த காமெடி நடிகர் எடுத்த புகைப்படம்!! நம்ம லிஸ்ட்ல இல்லையே
இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை அடுத்து சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன் படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.
இதனைதொடர்ந்து அடுத்தடுத்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆரம்பித்தார். அவர் நடிப்பில் பல படங்கள் வெளியாகினாலும் 75 சதவீத படங்கள் தோல்வியை சந்தித்து கீர்த்தி சுரேஷிற்கு ஏமாற்றத்தை கொடுத்தது.
சமீபகாலமாக தமிழில் தொடர் தோல்வியை கொடுத்ததால் கிளாமர் பக்கம் சென்ற கீர்த்தி சுரேஷ் மீண்டும் புது அவதாரத்தை எடுத்துள்ளார். ரிவால்வர் ரீட்டா என்ற புதுவிதமான ரோலில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி நடிக்கவுள்ளார். நடிகை கீர்த்தி சுரெஷ் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

