விஜய் படம் தான் கிடைக்கல.. சின்ன நடிகரை ஓகே பண்ண கீர்த்தி சுரேஷ்
தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். சாவித்ரி வாழ்க்கை வரலாற்று படத்திற்காக தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி படங்களை அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அப்படியே கதையை தேர்வு செய்து நடித்தால் வருமானம் இருக்காதே, அதற்காக டாப் நடிகர்களின் படங்களில் பெயருக்கு மட்டும் வரும் ஹீரோயின் ரோல் என்றாலும் நடிக்க ஒப்புக்கொள்கிறார்.
அடுத்து விஜய்யின் 66வது படத்தில் கீர்த்தி தான் ஹீரோயின் என முன்பு சொல்ல்லப்பட்டது. தெலுங்கு இயக்குமார் வம்சி அந்த படத்தை இயக்குகிறார். முதலில் கீர்த்தி தான் ஹீரோயின் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில் புஷ்பா படத்திற்கு பிறகு ராஷ்மிகாவை வம்சி ஹீரோயினாக போட்டுவிட்டார் என தகவல் சமீபத்தில் பரவியது.
விஜய் பட வாய்ப்பை இழந்த கீர்த்தி சுரேஷ் தற்போது அடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். மாரி செல்வராஜ் தான் அந்த படத்தை இயக்குகிறார்.