அந்த மொக்க படத்தில் நடிப்பதற்காக கோட்டையைவிட்ட கீர்த்தி சுரேஷ்! வெச்சு செய்யும் நெட்டிசன்கள்..
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக ராசியில்லாத நடிகை என்ற பெயரை எடுத்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து தென்னிந்திய முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தையும் கோடியில் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் திகழ்ந்தார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் வெளியான படங்களில் ஒருசில படங்கள் தவிர மற்ற படங்கள் படுதோல்வியை தான் சந்தித்து வருகிறது. தொடரி, பைரவா, பாம்பு சட்டை, தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி, மிஸ் இந்தியா, மரக்கார், அண்ணாத்த, உள்ளிட்ட படங்கள் கீர்த்தி சுரேஷிற்கு சரியாக அமையவில்லை.
இந்நிலையில் அண்ணாத்த படட்த்தில் தங்கச்சி கதாபாத்திரத்திற்காக இரு படங்களை மிஸ் செய்ததாக கூறப்பட்டது. அதில் ஒன்று தான் பொன்னியின் செல்வன் படம். குந்தவை ரோலிற்காக முதலில் திரிஷாவுக்கு முன் கீர்த்தி சுரேஷிடம் தான் பேசப்பட்டதாம்.
ஆனால் அண்ணாத்த படத்திற்காக அந்த படத்தின் வாய்ப்பினை தவறவிட்டுள்ளார் கீர்த்தி. இதனை நெட்டிசன்கள் பொன்னியின் செல்வன் படம் கீர்த்தி இடமிருந்து தப்பிச்சிடுச்சி என்று கலாய்த்து வருகிறார்கள்.

