அடேங்கப்பா.. 3000 கோடியை ஓவர்நைட்டில் முதலீடு செய்த கே.ஜி.எஃப் தயாரிப்பு நிறுவனம்

Yash KGF Chapter 2 Prabhas Fahadh Faasil
By Kathick Jan 03, 2023 07:32 AM GMT
Report

கே.ஜி.எஃப் 1, 2 படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றானது ஹோம்பலே பிலிம்ஸ்.

அண்மையில் வெளிவந்த காந்தாரா திரைப்படத்தை கூட இவர்கள் தான் தயாரித்திருந்தார்கள். இந்த நிறுவனம் அடுத்த 5 வருடத்திற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்கள் வைத்து படங்களை தயாரிக்கவுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் 'சலார்'. பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் 'டைசன்', ரக்ஷித் ஷெட்டியின் 'ரிச்சர்ட் ஆண்டனி', பகத் பாசில் 'தூமம்', ஸ்ரீ முரளி 'பகீரா', கீர்த்தி சுரேஷ் 'ரகு தாத்தா', மற்றும் கே.ஜி.எஃப் 3 என அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வரிசையாக பல படங்களை கைவசம் வைத்துள்ளனர்.

இந்நிலையில், இதற்காக சுமார் ரூ. 3000 கோடி முதலீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த அனைத்து படங்களுமே பான் இந்தியா படங்களாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.