ரஜினி - கமல் படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற காரணம்!! உண்மை உடைத்த நடிகை குஷ்பூ..
ரஜினி - கமல் - சுந்தர் சி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் தர்மன் படத்தினை நடிகர் கமல் ஹாசன் தயாரித்து வருகிறார்.

ரஜினி - கமல் கூட்டணி படத்தை இயக்குநர் சுந்தர். சி தான் முதலில் இயக்கவிருந்தது. ஆனால் சில காரணங்கள் சுந்தர் சி விலகினார். இந்த விஷயம் பெரியளவில் பேசப்பட்டு எதற்கு சுந்தர் சி வெளியேறினார் என்ற கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில் இதற்கு நடிகையும் சுந்தர் சி-யின் மனைவியுமான குஷ்பூ விளக்கம் ஒன்றினை பேட்டி மூலம் கொடுத்துள்ளார்.
மெசேஜை நான் சொன்னேன்
அதில், இந்த விஷயம் அவர்கள் 3 பேருக்கிடையே ஆனது. நான் அதில் கருத்து சொல்ல முடியாது. என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு இயக்குநர் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் கண்ணியமாக வெளியே வந்துவிட்டார். நாங்கள் தான் அவரைவிட ஆர்வமாக இருந்தோம்.

இப்படத்தில் இருந்து வெளியேறிவிடுவதாக கமலிடம் சொல்லச் சொல்லி சுந்தர் சி கேட்டார். நான் தான் அந்த மெசேஜை சொன்னேன். என் கணவருக்கு கமல் ஹாசன் தயாரிப்பாளர், ஆனால் எனக்கு அவர் நல்ல நண்பர், அதை எப்படி சொல்வது என்பதில் கணவருக்கு தயக்கம் இருந்தது.
கமல் மிகப்பெரிய நடிகர், ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார். இவர்கள் எல்லாம் இதில் இருக்கும்போது சில விஷயங்களை நாம் பேசக்கூடாது என்று குஷ்பூ தெரிவித்துள்ளார்.