அரியவகை நோயால் அவதிப்படும் நடிகை சமந்தா!! அவர் இப்படித்தான் என்று உண்மையை கூறிய பிரபல நடிகர்..
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. நாக சைதன்யாவை விவாகரத்து செய்துவிட்டு படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிகப்பட்டார்.
இதனால் கடந்த பல மாதங்களாக உயிருக்கு போராடி நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன் என்று சமந்தா கூறியிருந்தார். இதற்காக கடினமான சிகிச்சையையும் மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கன்னட நடிகரும் தமிழ் சினிமாவில் வில்லன் ரோலில் நடித்து பிரபலமானவருமான நடிகர் கிச்சா சுதீப் சமந்தாவை பற்றி சில விசயங்களை பகிர்ந்துள்ளார். நான் சமந்தாவுடன் பேசவில்லை, ஆனால் நடிகை வரலட்சுமியுடன் அதுகுறித்து பேசியிருந்தேன்.
ஸ்ட்ராங்கான லேடி தான் அவர். சிறந்த நடிகை சமந்தா. அப்படி கஷ்டப்பட்டு இருந்ததால் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள் என்றும் அவருடன் 40 நாட்கள் ஷூட்டிங்கில் நான் ஈ படத்தில் இருந்தோம். வந்தால் என்னிடம் ஹெலோ, ஹாய் ஒரு ஸ்மைல் தான் பண்ணுவார்கள்.
குறைந்த அளவில் தான் பேசியிருக்கிறேன் சமந்தாவுடன் என்று கூறியுள்ளார். என்னை என்னுடைய ஹீரோ நான் தான் என்று ஒரு பதிவினையும் போட்டார் சமந்தா என தெரிவித்துள்ளார் நடிகர் கிச்சா சுதீப்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/aab6f044-9ac2-4ae3-a774-19a882ad6a42/22-63ad79aad9487.webp)