ஒரு கால் இழந்த லொள்ளு சபா சிரிக்கோ உதயா!! 1 லட்சத்தை வாரி வழங்கிய KPY பாலா..
Star Vijay
Actors
KPY Bala
Tamil Actors
By Edward
லொள்ளு சபா சிரிக்கோ உதயா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று லொள்ளு சபா. ந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களில் ஒருவர் தான் சிரிக்கோ உதயா. இவருக்கு சர்க்கரை நோய் அதிகமாக இடது கால் எடுக்கும் நிலை வந்துள்ளது.
தற்போது ஓமந்தூர் மருத்துவமனையில் சர்க்கரை வியாதியால் பாதித்து காலை இழந்த சிரிக்கோ உதயாவை பிரபலங்கள் பலரும் பார்த்து உதவி செய்து வருகிறார்கள்.
முத்துக்காளை, கிங்காங், டிஎஸ்கே உள்ளிட்டவர்கள் பார்த்து உதவினர். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டில் இருக்கும் சிரிக்கோ உதயாவை, விஜய் டிவி பிரபலமான KPY பாலா நேரில் சந்தித்துள்ளார்.
சிரிக்கோ உதயாவை நேரில் சந்தித்ததுடன் 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி வீடியோவை பகிர்ந்துள்ளார் KPY பாலா.