பேயாக வந்தாலும் நீ என்னுடன் இருக்கனும்.. குஷ்பூவுக்கு அந்த நடிகர் இவ்ளோ நெருக்கமா?
நடிகை குஷ்பு எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவர் சமீப காலத்தில் தனது உடல் எடையை குறைத்து அதிக அளவில் ஒல்லியாக மாறி இருக்கிறார். அதன் போட்டோக்கள் அதிகம் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் கோவிந்தா உடன் எடுத்த போட்டோ ஒன்றை அவர் வெளியிட்டு இருக்கிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல தான் இப்படி செய்து இருக்கிறார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது..
"என் வாழ்க்கையில் கிடைத்த முதல் நண்பன் நீ. எனது பெஸ்டியாக தற்போது வரை இருந்து வருகிறாய். எல்லா போராட்டம், வெற்றி, கண்ணீர் என அனைத்திலும் நாம் உறுதுணையாக இருந்திருக்கிறோம். நாம் எப்போதும் அப்படி தான் இருப்போம். (உங்களுக்கு வேறு வழியும் இல்லை, நீ என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும், அதன் பின் நான் பேயாக இருக்கும்போதும் என்னுடன் இருக்க வேண்டும்)"
என குஷ்பு குறிப்பிட்டு இருக்கிறார்.