ஜனநாயகன் நாங்க எதுக்கு தடுத்து நிறுத்தனும் - குஷ்பு பதிலடி
Sivakarthikeyan
Kushboo
By Tony
ஜனநாயகன் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வரவிருந்த படம். ஆனால், கடைசி நேரத்தில் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் சொன்ன தேதியில் வரவில்லை.
இதனால், ரசிகர்கள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர். அதோடு விஜய் கடைசி படம் என்பதால் ஏதாவது ஒரு வழியில் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என படக்குழு நீதிமன்றம் வரை சென்று போராடியது.

ஆனால், அங்கும் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரவில்லை. இந்நிலையில் நடிகை குஷ்புவிடம் ஜனநாயகன் வராததற்கு பிஜேபி தான் காரணமா என கேட்க, நாங்கள் எதற்கு தடுக்க வேண்டும்.
நாங்கள் தடுப்பதாக இருந்தால் பராசக்தி-யை தான் தடுத்திருக்க வேண்டும், அதுவே சொன்ன தேதிக்கு வந்துவிட்டதே. இது சென்ஸார் பிரச்சனை, எங்களுக்கு சம்மந்தம் இல்லை என பதிலடி கொடுத்துள்ளார்.