உங்க தாத்தா விக்ரமுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்! வைரலாகும் ரோலக்ஸ் கெட்டப்பில் குட்டி விக்ரம் புகைப்படம்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் உருவான படம் விக்ரம். மல்டிவெர்ஷன் அமைப்பில் உருவாக்கி இப்படம் கைதி படத்தின் தொடர்ச்சியாக லிங்க் செய்து எடுத்திருக்கிறார் லோகேஷ்.
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இப்படம் இதுவரை 410 கோடி அளவில் வசூலித்துள்ளது. இப்படத்தில் அனைவரும் தங்களின் சிறப்பான நடிப்பை காட்டி நடித்ததை போன்று குட்டி விக்ரமாக நடித்த குட்டி குழந்தையும் சிறப்பாக நடித்திருப்பார்.
கமலுடன் சேர்ந்து நடித்த அனைத்து காட்சிகளிலும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார் குட்டி விக்ரம்.
தற்போது ரோலக்ஸ் கெட்டப்பில் குட்டி குழந்தை எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை சில ரோலக்ஸ் கெட்டப்பில் இருக்க, உங்க தாத்தா விக்ரமுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் என்ற மீம் புகைப்படத்தையும் வைரலாக்கி வருகிறார்கள்.