மேடையில் சூர்யா பட நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்... கோபத்தில் கொந்தளித்த சிம்பு பட நடிகை
மலையாள சினிமாவில் நடிகையாக இருந்து தமிழில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளின் வரிசையில் இருப்பவர் நடிகை அபர்ணா பாலமுரளி. சமீபத்தில் சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து அப்படத்திற்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை பெற்று பிரபலமானார்.
இதன்பின் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் அபர்ணா பாலமுரளி, தன்கம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.

அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில் கேரளாவில் ஒரு சட்டக்கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பிரமோஷனுக்காக அந்நிகழ்ச்சி படக்குழுவினருடன் கலந்து கொண்டுள்ளார் அபர்ணா பாலமுரளி.
அப்போது திடிரென மேடையில் ஒரு மாணவர் அபர்ணாவுக்கு பூ கொடுத்ததுடன் சட்டென கையை பிடித்தும் புகைப்படம் எடுக்க அபர்ணா தோல்மீது கைபோடவும் முயற்சி செய்துள்ளார்.

சுதாரித்துக்கொண்ட அபர்ணாஅங்கிருந்து விலகி சேரில் உட்கார்ந்தார். அதன்பின்பும் மேடையில் வந்த அந்தநபர் நான் தவறாக எதுவும் நட்க்கவில்லை.
உங்களுடைய ரசிகனாக போட்டோ எடுக்க வந்தேன் என்று கூறிவிட்டு மீண்டும் கைக்கொடுக்க முயற்சி செய்துள்ளார். அபர்ணா கைக்கொடுக்காமல் பதிலடி கொடுத்து அமைதியாகினார்.
இதற்கு பலர் கண்டனத்தை தெரிவித்துள்ளதை அடுத்து சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகன் ஒரு பதிவினை போட்டு கோபப்பட்டுள்ளார். இது மிகவும் அருவருப்பான விசயம் என்று அவர் போட்டுள்ள பதிவினை பலர் பகிர்ந்து வருகிறார்கள்
Unbelievable and disgusting! https://t.co/Ls4y06QrVx
— Manjima Mohan (@mohan_manjima) January 19, 2023