இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும்!! தோல்வியா மனமுடைந்த மெஸ்ஸி..

Lionel Messi Spain FIFA World Cup Argentina
By Jai Jul 21, 2026 06:00 AM GMT
Report

மெஸ்ஸி

பிஃபா உலககோப்பை போட்டிகள் கடந்த ஒரு மாதமாக அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் நடந்து வந்தது. இதில் எல்லோரும் கப் ஜெயிக்கும் என எதிர்பார்த்த ப்ரான்ஸ் அணி 4வது இடம் பிடித்து அதிர்ச்சி கொடுத்தது. இந்நிலையில் நட்சத்திர ஆட்டக்காரர் மெஸ்ஸி-ன் அர்ஜெண்டினா, லாம்னி யாமல்-ன் ஸ்பெயின் ஆகிய அணிகள் பைனலில் மோதியது.

இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும்!! தோல்வியா மனமுடைந்த மெஸ்ஸி.. | Lionel Messi Breaks Silence With Emotional Note

இதில் எல்லோரும் அர்ஜெண்டினா அணியே வெற்றி பெறும் என நினைத்த நிலையில், அந்த அணி ஒரு கோல் கூட போடாமல் ஸ்பெயினிடம் படுதோல்வியை தழுவியது. கடைசி உலகக்கோப்பை போட்டி மெஸ்ஸிக்கு இப்படியா சோகத்தில் முடிவடைய வேண்டும் என்று உலக மெஸ்ஸி ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

உலகக்கோப்பை இறுதிப்போட்டி தோல்வி தொடர்பாக மெஸ்ஸி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தக் காயம்

அதில், உலகக்கோப்பை பைனலில் அடைந்த தோல்வியால் ஏற்பட்ட காயம் அளவிடமுடியாதது. இக்காயம் ஆறுவதற்கு நீண்ட காலம் ஆகும், அதே நேரத்தில் உலகக்கோப்பையின்போது கிடைத்த சிறந்த நினைவுகளையும் மனதில் வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

நாடு முழுவதும் இருந்து அர்ஜென்டினா அணிக்கு ஆதரவு கிடைத்தது. அது மீண்டும் எங்களை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக நிறுத்தியிருக்கிறது.

இந்தக் காயம் ஆற நேரம் எடுக்கும்!! தோல்வியா மனமுடைந்த மெஸ்ஸி.. | Lionel Messi Breaks Silence With Emotional Note

அர்ஜென்டினா அணியின் சாதனையை இப்போது புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் அர்ஜென்டினா அணி தொடர்ந்து 2 உலககோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.

அதற்கு ஆதரவாக அர்ஜென்டினா ரசிகர்களுக்கு நன்று கூற கடமை பட்டுள்ளேன், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயின் அணிக்கு வாழ்த்துக்கள் என்று மெஸ்ஸி அதில் தெரிவித்துள்ளார்.