டாக்ஸிக் பட நெருக்கமான காட்சி!! கியாரா அத்வானியை விமர்சிப்பவர்களை விளாசிய நடிகர்...
டாக்ஸிக்
ஆகஸ்ட் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள டாக்ஸிக் படத்தின் தபாஹி பாடல் வீடியோ காட்சிகள் கடும் விமர்சனத்தை பெற்றும் அதில் நடித்த கியாரா அத்வானியை திட்டியும் வருகிறார்கள். திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயானதை மறந்துவிட்டு யஷுடன் சேர்ந்து இந்தளவுக்கு தரம் தாழ்ந்து நடிப்பதா என்று விமர்சனம் எழுந்து வந்தது.
இந்நிலையில் தபாஹி மீம்ஸ், விளாசலை பார்த்த டாக்ஸிக் படத்தில் நடித்த நடிகர் பெனடிக்ட் கேரட் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதில், தபாஹி வீடியோ குறித்த விமர்சனங்களை பார்த்தேன், ஆம் நான் டாக்ஸிக் படத்தில் நடித்துள்ளேன். ஆனால் அதனால் நான் பேசவில்லை. ஒரு நடிகனாக பேசுகிறேன். மக்கள் யஷ்-ஐ பாராட்டுவதை பார்க்கிறேன், ஆனால் கியாரா அத்வானியை காமெடி பீஸாக்கிவிட்டார்கள். கியாராவுக்கு கல்யாணமாகிவிட்டது, அவர் ஒரு தாய். கணவர் சித்தார்த் மல்யோத்ராவுக்கு பதில் யஷுடன் ஹனிமூன் போயிருக்கிறார். யஷுக்கும் கல்யாணமாகிவிட்டது.
அவருக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படி இருக்க பெண்ணை மட்டும் விளாசுவது ஏன்? ஆணை பாராட்டுவது ஏன்? அவர்கள் இருவரும் நடிகர்கள், அவர்களின் வேலை நடிப்பது, கதாபாத்திரமாக மாறி உங்களை அவர்கள் நிஜமாக காதலிக்கவில்லை என்றாலும் கதாபாத்திரத்திற்காக காதலிப்பது போன்று உங்களை நம்ப வைப்பது அவர்களின் வேலை.

பெனடிக்ட் கேரட்
நானும் ஒரு நடிகன், ஆனால் அவர்கள் அளவுக்கு இல்லை. ஆனால் நான் 3 தயாரிப்புகளில் ஆடையில்லாமல் நடித்துள்ளேன். ஒரு வெப் தொடர் மற்றும் படத்தில் செக்ஸ் காட்சியில் நடித்திருக்கிறேன்.
அதில் நடித்த பெண்கள் என் பார்ட்னர்கள் கிடையாது, நாங்கள் ஒன்றும் நிஜமாக செக்ஸ் வைக்கவில்லை, நாங்கள் அந்த ரோலுக்காக நடிக்க மட்டுமே செய்தோம். சித்தார்த் மல்ஹோத்ரா ஒரு நடிகையை திருமணம் செய்திருக்கிறார். கியாரா அத்வானி ஒரு நடிகரை மணந்தார்.

படங்களில் நடிக்கும்போது ரொமான்ஸ், நெருக்கமான காட்சிகள், முத்தக் காட்சி, செக்ஸ் காட்சிகளில் நடிக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். கியாராவை நடிகை என்பதால் விமர்சிக்கவில்லை, இன்னொருவரின் மனைவி, குழந்தைக்கு தாய் என்பதால் விமர்சிக்கிறார்கள்.
நடிகைகளுக்கு திருமணமாகிவிட்டால் நடிப்பை நிறுத்திவிட வேண்டும் என்று பேசுவது சரியில்லை, ஒருவர் தன் வேலையை செய்வதற்காக அவ்ரை தாக்குவது சரியில்லை, கியாரா அத்வானி எந்த தவறும் செய்யவில்லை, அவரின் வேலையை தான் செய்கிறார் என்று விளாசி பேசியுள்ளார்.