ஐஸ்வர்யா ராய் முதல் கல்யாணி வரை!! தன்னைவிட வயது குறைவான நடிகருக்கு ஜோடியாக நடித்த நடிகைகள்..
நடிகைகள்
சினிமாத்துறையில் பல முன்னணி நடிகர்கள் தன்னைவிட வயது குறைவான நடிகைகளுடன் ஜோடிப்போட்டு நடித்திருக்கிறார்கள். தற்போது 60 வயதை தாண்டிய நடிகர்கள் தன்னைவிட 20 வயதுக்கும் மேல் குறைவான நடிகைகளுடன் ஜோடிப்போட்டு நடித்து வருகிறார்கள்.
அதேபோல் நடிகைகள் தன்னைவிட குறைவான ஹீரோக்களுடன் ஜோடிப்போட்டு நடித்துள்ளார். அப்படி யார் யார் தன்னைவிட வயது குறைந்த ஹீரோக்களுடன் நடித்திருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்..

நடிகை சினேகா தன்னைவிட 3 வயது குறைந்த தனுஷுடன் புதுப்பேட்டை, பட்டாசு போன்ற படங்களில் நடித்துள்ளார். தன்னைவிட 3 வயது குறைவான நடிகர் சும்புவுடன், சிலம்பாட்டம் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார் சினேகா.
நடிகை ஜோதிகா, தன்னைவிட வயது குறைவான நடிகர் சிம்புவுடன், மன்மதன், சரவணா போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் நடிகர் பிரத்விராஜுடன் மொழி படத்தில் நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் நடித்து வரும் நடிகை நயன் தாரா, தன்னைவிட ஒரு வயது குறைந்த சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் படத்தில் நடித்துள்ளார். அதேபோல் தன்னைவிட 5 வயது குறைந்த கவினுடன் ஹார் என்ற படத்தில் நடித்து வருகிறார் நயன் தாரா.
நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னைவிட குறைந்த நடிகரான அபிஷேக் பச்சனுடன் ஜோடியாக நடித்து அவரை திருமணமும் செய்திருக்கிறார். மேலும் 8 வயது குறைந்தவரான ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

நடிகை சமந்தா தன்னைவிட குறைவான தேவ் மோகனுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். நடிகை அனுஷ்கா, Miss Shetty Mr Polishetty என்ற படத்தில் தன்னைவிட 9 வயது குறைவான நடிகர் நவீன் பாலிஷெட்டி உடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.
லோகா சாப்டர் 1 படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தன்னைவிட 8 வயது குறைவான நடிகர் நஸ்லனுடன் அப்படத்தில் நடித்து ஷாக் கொடுத்துள்ளார்.