அழகா இருக்குறது குத்தமா!! ஒலிம்பிக் ரசிகர்களை கிரங்கடித்து வெளியேறிய வீராங்கனை..
பராகுவே நாட்டை சேர்ந்த நீச்சல் வீராங்கனை லுவானா அலோன்சா, பாரிஸில் நடைபெற்று வரும் 2024 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். 100 மீட்டர் நீச்சல் போட்டியில் அரையிறுதிக்கான தகுதியை வெறும் 0.24 வினாடிகளில் தவறவிட்ட லுவானா ஒலிப்பிக் போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்தில் இருந்து கொண்டு தன் நாட்டு அணி வீரர்களுக்கு ஆதரவளிக்க டிஸ்னிலேண்ட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு குறைவான ஆடை மற்றும் போட்டியாளர்களுடன் பழகுவது போன்றவற்றால் ஒலிம்பிக் போட்டிகளில் மற்ற போட்டியாளர்களின் கவனத்தை சிதறிக்கிறார் என்று கூறி அவரை வெளியேற்றியதாக கூறப்பட்டது.
ஆனால் அது உண்மை இல்லை என்றும் அவரது இருப்பு பராகுவே அணிக்குள் பொருத்தமற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது என்பதால் பராகுவே ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரால் சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளார் என்பது தான் உண்மை.
சிலர் தவறான செய்தியை பரப்புகிறார்கள் என்றும் தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என்றும் லுவானா அலோன்சா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அவரின் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வாய்ப்பிளந்தபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும் லுவானா நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.