வெங்கடேஷ் பட் இடத்தை பிடித்த மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி, பிள்ளைகளை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ

Cooku with Comali Madhampatty Rangaraj
By Kathick May 01, 2024 06:00 PM GMT
Report

சமையல் துறையில் மிகவும் பிரபலமான நபர் மாதம்பட்டி ரங்கராஜ். தனது குடும்ப தொழிலான சமையல் கலையை கற்றுக்கொண்டு, அதை எடுத்து நடத்தி வருகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இதன்பின் கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக நடித்த பென்குயின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகியபின் அவருக்கு பதிலாக நடுவராக வந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். திரையுலக நட்சத்திரங்கள் மூலம் பிரதமர் மோடி வரை பலருக்கும் தன் கையால் சமைத்து கொடுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜின் குடும்பத்தை பலரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்த நிலையில், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மாதம்பட்டி ரங்கராஜ் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது. 


GalleryGallery