தன்னை ஓங்கி அறைந்த நடிகருக்கு பளார்விட்ட நடிகை மதுபாலா!! அதிர்ந்து போன படக்குழு..
மதுபாலா
ரோஜா படத்தின் மூலம் இந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை மதுபாலா. தற்போது 57 வயதாகும் மதுபாலா, தற்போதும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 1997ல் வெளியான யஷ்வந்த் படத்தின் ஷூட்டிங்கின்போது தனக்கு நடந்த ஒரு அதிர்ச்சியான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

நானா படேகர்
அப்படத்தின் குறிப்பிட்ட காட்சியில் நடிக்கும்போது நடிகர் நானா படேகர், கதாபாத்திரத்தின் உணர்வுகளை எந்தவித போலித்தனமும் இல்லாமல் அப்படியே நிஜமாக இருக்க வேண்டும் என்பதற்காக கிளிசரின் பயன்படுத்த மறுத்துவிட்டார்.
இதனால் நிஜமான கண்ணீர் வரவேண்டும் என்று அவர் விரும்பிய சூழலில், நடிகை மதுபாலாவால் அந்த காட்சியில் உடனடியாக கண்ணீர் வரவழைக்க முடியவில்லை. இந்த சிக்கலான சூழ்நிலையில் தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. அப்போது உணர்ச்சிவசப்பட்ட நானா படேகர் எதிர்பாராதவிதமாக மதுபாலாவை ஓங்கி அறைந்துள்ளார்.

கோபம் தலைக்கேரி
இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தனக்கு நேர்ந்த இந்த செயலால் கோபம் தலைக்கேரிய மதுபாலாவும் சற்றும் யோசிக்காமல் நானா படேகரை உடனே திருப்பி அறைந்துள்ளார். ஆனால் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விஷயமும் அல்லா, அது என்னுடைய இயல்பான தற்காப்பு மறுவினை தான்.
எதிர்பாராமல் நடந்த அந்த அடியால் ஏற்பட்ட கோபத்தில் நான் அப்படி செய்துவிட்டேன் என்று மதுபாலா தன்னுடைய விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

பட இயக்குநர் அனில் மோட்டூவால், அக்காட்சியை படமாக்குவதற்கு ஒரு முழு நாளை ஒதுக்கி இருந்தார். ஆனால் இருவருமே நிஜமாக அடித்துக் கொண்டதால், அந்த காட்சியில் இருவரின் உணர்வுகளும் மிக எதார்த்தமாக வெளிப்பட்டன.
இந்த தீவிரமான நடிப்பின் காரணமாக மீண்டும் அதே காட்சியை மறுபடியும் படமாக்க வேண்டிய அவசியில்லாமல் போனதுடன், காட்சியும் மிகச்சிறப்பாக அமைந்ததாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
இது குறித்து மதுபாலா, இந்த அனுபவம் தனக்கு ஒரு சிறந்த மெத்தட் ஆக்டிங் பாடமாக அமைந்ததாகவும் அதுவரை கேமராவுக்கு முன் மட்டும் நடித்துப் பழகிய எனக்கு கதாபாத்திரமாகவே மாறி வாழ்வதை நானா படேகர் கற்றுக் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.