மதுரை முத்துவிடம் செருப்படி வாங்கிய நபர்கள்! அப்படி என்ன பண்ணாங்க?
Prank
Madurai Muthu
By Parthiban.A
நடிகர் மதுரை முத்து யார் என்பது தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். ஸ்டாண்டப் காமெடியால் சின்னத்திரை ரசிகர்களை ஒருகாலத்தில் விழுந்து விழுந்து சிரிக்கவைத்தவர் அவர். தற்போது மொக்க காமெடி என சொல்லும் அளவுக்கு விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடி செய்து வருகிறார். மேலும் தனியாக youtube சேனல் தொடங்கி அதிலும் காமெடி செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது மதுரை முத்து வீட்டுக்கு சென்று சிலர் பிராங்க் செய்து இருக்கின்றனர். கார் டியூ மூன்று மாதம் கட்டவில்லை என சொல்லி அவரிடம் வம்பு செய்திருக்கின்றனர்.
அவரது காரை எடுத்து சென்றுவிடுவோம் என அவர்கள் சொன்னதும் கோபத்தின் உச்சிக்கே சென்ற மதுரை முத்து தனது செருப்பை கழட்டி அவர்களை துரத்தி துரத்தி அடிக்க தொடங்கிவிட்டார்.