திருமணமாகி ரெண்டே மாசத்துல முட்டுக்கட்டை போடும் மகாலட்சுமி.. புலம்பும் ரவிந்தர்..
சின்னத்திரை சீரியல் நடிகையாக ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வந்தவர் நடிகை மகாலட்சுமி. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தரை 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தார்.
ரவீந்தர் - மகாலட்சுமி
அதன்பின் இரண்டாம் திருமணத்தை ரவீந்தருடன் முடித்து சர்ச்சைக்குள்ளானது. பல விமர்சனங்களை கண்டுக்கொள்ளாத ரவீந்தர் - மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர். கடந்த வாரம் ரவீந்தருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.. இந்நிலையில் நேற்று முன் தின நாள் தீபாவளியை தல தீபாவளியாக கொண்டாடியிருக்கிறார்கள் புது தம்பதியினர்.
சீரியலில் நடிக்கும் மகாலட்சுமி பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்யும் ரவீந்தரை அதை செய்ய கூடாது என்று கண்டிஷன் போட்டு இருந்தார். ஆனால் அதை மீறியும் ரவிந்தர் பிக்பாஸ் 6 சீசனை பிரபல யூ டியூப் சேனளுடன் இணைந்து விமர்சனம் செய்து வந்தார்.
இதனால் ரவிந்தர் மீது கோபத்தில் இருந்து வந்தார் மகாலட்சுமி. தற்போது ரவிந்தரின் ஆசைக்காக அதை செய்ய சொல்லி இறங்கி வந்து இருக்கிறார். இதை கேட்ட நெட்டிசன்கள் ரவீந்தருக்கா இந்த நிலை இன்று கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.