அந்த நடிகரின் படம் என்னோட மிகப்பெரிய ஃபெயிலியர்!! நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஓபன் டாக்..
ரகுல் ப்ரீத் சிங்
தமிழில் அயலான், இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான De De Pyaar De 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ரிலீஸாகி 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வேட்டையை நடத்திய உற்சாகத்தில் ரகுல் ப்ரீத் சிங், பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்பைடர் ஃபெயிலியர்
அதில், கஜினி, துப்பாக்கி என ஹிட் கொடுத்த ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்பைடர் படத்தில் நடிக்கப்போகிறோம் என்ற வாய்ப்பு வந்து கமிட் பண்ணும்போது ரொம்ப பெருசாக நினைத்தேன். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது.

அதற்கு முன் ராம்சரண், ஜூனியர் என் டி ஆர் என டோலிவுட் ஸ்டார் படங்களில் வரிசையாக 8 ஹிட் படங்களை கொடுத்த நிலையில், கிடைத்த பெரிய வாய்ப்பு கடைசியில் ஃபிளாப்பாகிவிட்டது.
சினிமாவில் வெற்றி, தோல்வி ஒரு அங்கமாக இருக்கும் என்பதை அப்போதுதான் புரிந்துக்கொண்டேன் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரணாசி படத்தில் நடித்து வரும் நிலையில், ரகுல் ப்ரீத் சிங் இப்படி பேசியது மகேஷ் பாபு ரசிகர்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.