நான் செஞ்ச அந்த ஒரு தப்பு தான் எல்லாத்துக்கு காரணம்!! ஓப்பனாக கூறிய நடிகை மாளவிகா..
விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேறமாதிரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் நடிகை மாளவிகா மேனன்.
இப்படத்தினை தொடர்ந்து மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த மாளவிகா மாடலிங் துறையிலும் பிஸியாக இருந்து வருகிறார்.
அடக்கவுடக்கமாக நடிக்க ஆரம்பித்தவர் தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு மாறி நடித்து வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 2011ல் சினிமா கேரியரை ஆரம்பித்த எனக்கு சரியான படங்கள் அமையவில்லை.
அதற்கு காரணம் பட வாய்ப்பு கிடைக்க நான் செய்த தவறுதான். படத்தின் கதையை கேட்கும் போது எனக்கான கதாபாத்திரம் இல்லாத போது தோன்றினாலும் அதில் நடித்தேன்.
கதை திரைக்கதை குறித்த புரிதல் இல்லாமலும் அப்படி நிறைய படங்களை நான் தவறவிட்டு இருக்கிறேன். அப்படி நான் இழந்த படத்தின் கதாபாத்திரத்தின் தன்மை மிகவும் வலுவானதாக இருக்கும்.
பின் தவறவிட்டுவிட்டோமே என்றூ ஏங்கியும் இருப்பதாகவும் இனிமே அப்படியான ஒரு தப்பை செய்ய மாட்டேன் என்று மாளவிகா மேனன் தெரிவித்துள்ளார்.