பிரபல நடிகர் செய்த செயல்.. உறைந்து போய் நின்ற மாளவிகா மோகனன்..
இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன், தங்கலான் என முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஹிருதயபூர்வம் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அடுத்ததாக ராஜா சாப் மற்றும் சர்தார் 2 என இரண்டு திரைப்படங்கள் மாளவிகா கைவசம் உள்ளன. இந்த நிலையில், நடிகை மாளவிகா மோகனன் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவர் கூறியதாவது: "மும்பையில் ஷாருக்கான் நடித்த டான் படத்தின் படப்பிடிப்புக்கு நான் சென்றபோது, அங்கு அமர்ந்திருந்த பள்ளி மாணவியான என் முன்னே ஷாருக்கான் வந்து நின்று ஹலோ சொன்னார். ஆனால், அவரை பார்த்து நான் ஹலோ கூட சொல்லவில்லை, அப்படியே உறைந்து போய்விட்டேன்" என மாளவிகா கூறினார்.