நடிகைகளால் மட்டும் அதை மாற்ற முடியாது!! நடிகை மாளவிகா மோகனன் ஓபன் டாக்...
மாளவிகா மோகனன்
பிரபல நடிகை மாளவிகா மோகனன், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், இந்திய சினிமாவில் பெண்களுக்கு வலுவான ரோல்கள் வேண்டும் என்றால் அதிகமான பெண் இயக்குநர்களும் பெண் திரைக்கதை ஆசிரியர்களும் வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
திரையில் பெண்களின் பிரதிநிதித்துவம் சிறப்பாக மாற வேண்டும் என்றால் நடிகைகளால் மட்டுமே ஏற்படுத்த முடியாது, அதிகமான பெண் இயக்குநர்கள், எழுத்தாளர்கள் வரவேண்டும். அவர்களால் தான் எங்களுக்கே உரிய பார்வையுடன் புதிய கதைகளை சொல்ல முடியும்.

பெண் இயக்குநர்கள், எழுத்தாளர்கள்
தங்களின் அனுபவங்களை கதைகளில் கொண்டு வருவார்கள். எனக்கு கதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வலிமையான பெண் ரோல்களில் நடிக்கவே விருப்பம்.
அப்படியான கதைகள் அதிகம் உருவாக வேண்டும், அதிகமான பெண் இயக்குநர்கள் வந்தால், இந்தியாவிலும் குவென்டின் டிரான்டினோவின் கில் பில் படத்தை போன்ற சிறந்த ஆக்ஷன் திரைப்படத்தை உருவாக்க முடியும் என்று மாளவிகா மோகனன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.