டேட்டிங் வான்னு கூப்பிட்ட வைல்ட் கார்ட் நபர்!! வீணா காதலுக்கு செக் வைக்கும் புது வில்லன்..

Ramya Krishnan Vijay Television Shrutika
By Jai Jul 27, 2026 11:45 AM GMT
Report

செகண்ட் லவ்

விஜய் தொலைக்காட்சியில் ரம்யா கிருஷ்ணன் மற்றும் ஸ்ருதிகா அர்ஜுன் இருவரும் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் செகண்ட் லவ். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகி வரும் செகண்ட் லவ் நிகழ்ச்சி தற்போது 2வது வாரத்தை தாண்டி வெற்றி கரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

டேட்டிங் வான்னு கூப்பிட்ட வைல்ட் கார்ட் நபர்!! வீணா காதலுக்கு செக் வைக்கும் புது வில்லன்.. | Wild Card Entry Veena Dinesh Love Issue Secondlove

6 பெண்கள், 6 ஆண்கள் களமிறங்கிய இந்த நிகழ்ச்சியில் யாருக்கும் காதல் செட்டாகாத போட்டியாளர்களை வெளியேற்றும் டாஸ்க் நடத்தப்பட்டதில் அசீம், இந்த வீட்டில் எந்த பொண்ணு கூடவும் வைப் செட்டாகவில்லை, நல்ல நண்கர்கள் கிடைச்சிருக்காங்க என்று கூறி வீட்டைவிட்டு வெளியேறினார். ஈடம் மற்றும் ராஜாவும் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மூன்று பேர் வெளியேறிய நிலையில் பெண்களை கவர புதிதாக 3 வைல்ட் கார்ட் ஆண் போட்டியாளர்களை வீட்டிற்குள் நுழைத்துள்ளனர்.

டேட்டிங் வான்னு கூப்பிட்ட வைல்ட் கார்ட் நபர்!! வீணா காதலுக்கு செக் வைக்கும் புது வில்லன்.. | Wild Card Entry Veena Dinesh Love Issue Secondlove

முதல் நாளிலேயே புது போட்டியாளர், தினேஷுடன் தீவிர காதலில் இருக்கும் வீணாவை டேட்டிங்கிற்கு கூப்பிட்டு சண்டை போட்டார். அதற்கு வீணா, நானும் தினேஷும் ஷோவுக்காக நடிக்கல, உண்மையாகவே காதலிக்கிறோம் என்ரு மூக்கறுக்கப் பார்த்து பதில் சொன்னார்.

வீணா காதலுக்கு செக்

ஆனால் அசராத புது போட்டியாளர் வெறும் 15 நாளில் யாருக்கும் உண்மையா லவ் வராது என்று வம்பிழுத்தார். இதனால் கடுப்பான தினேஷ், இன்னும் இரண்டு வாரம் இருக்கு, உனக்கு வீணாவை பிடிச்சிருந்து, அவளுக்கும் உன்னை பிடிச்சிருந்தா தாராளமா அவளை காதலிச்சுப்பார் என்று தினேஷ் கூறியிருக்கிறார்.

டேட்டிங் வான்னு கூப்பிட்ட வைல்ட் கார்ட் நபர்!! வீணா காதலுக்கு செக் வைக்கும் புது வில்லன்.. | Wild Card Entry Veena Dinesh Love Issue Secondlove

மறுபக்கம் தேஜஸ்-நேஹா ஜோடியும் உடைந்து போக, பிரியங்கா, சிந்துரி, மோனிஷா என பல பெண்கள் இன்னும் சிங்கிளாகவே இருக்கிறார்கள். ஒரே வாரத்தில் லவ், அடுத்த வாரமே பிரேக்-அப் அதுக்குள்ள புது ஆள் எண்ட்ரி என செகண்ட் லவ் வீட்டில் பல கூத்துகள் நடப்பதை பார்த்து நெட்டிசன்கள் இதெல்லாம் ஷோவா என்று கலாய்த்து வருகிறார்கள்.