அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி, ஏன்.. நடிகை மாளவிகா மோகனன் ஓபன்!

Malavika Mohanan Tamil Cinema Actress
By Bhavya Nov 28, 2025 06:30 AM GMT
Report

மாளவிகா மோகனன்

இந்திய அளவில் பிரபலமான நாயகியாக வலம் வருகிறார் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் அறிமுகமான இவர், விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார்.

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த ஆண்டு தமிழில் வெளிவந்த தங்கலான் படத்தில் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசரவைத்தார்.

அந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி, ஏன்.. நடிகை மாளவிகா மோகனன் ஓபன்! | Malavika Open Talk About She Is Very Lucky

ஏன்! 

இந்நிலையில், தி ராஜா சாப் படத்தில் நடித்தது பற்றி மாளவிகா மோகனன் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அதில், " பொதுவாக, ஸ்டார் ஹீரோக்களின் படங்களில் கதாநாயகி வேடங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. இரண்டு பாடல்களும் நான்கு அல்லது ஐந்து காட்சிகளும் மட்டுமே இருக்கும்.

ஆனால், இந்த விஷயத்தில் நான் அதிர்ஷ்டசாலி. 'தி ராஜாசாப்' படத்தில் எனக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது.

ஒரு கதாநாயகிக்கு இப்படி ஒரு வேடம் மிகவும் சிறந்தது. ஒரு அறிமுக படத்திற்கு இப்படி ஒரு வேடம் கிடைப்பது அதிர்ஷ்டம். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.