ஜனநாயகன் படத்திற்காக நடிகை மமிதா பைஜூ வாங்கிய சம்பளம்.. இதோ விவரம்
இன்றை தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நாயகியாக வலம் வருபவர் மமிதா பைஜூ. பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவர் தமிழில் Dude என்கிற வெற்றிப்படைத்தை கொடுத்தார்.
இதை தொடர்ந்து இவர் நடித்துள்ள ஜனநாயகன் படம் அடுத்ததாக வெளிவரவிருக்கிறது. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து முதல் முறையாக நடித்துள்ளார்.

தணிக்கை சான்றிதழ் தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நடந்து வருவதால், படத்தின் ரிலீஸில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விரைவில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஜனநாயகன் படத்தில் நடிப்பதற்காக மமிதா பைஜூ வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க மமிதா பைஜூ ரூ. 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளாராம். ஜனநாயகன் படத்தை தொடர்ந்து சூர்யா 46, தனுஷ் 54 ஆகிய படங்களில் மமிதா பைஜூ நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.