மணிரத்னம் என்றால் உசத்தி, மற்ற இயக்குனர்கள் ஏமாந்தவர்களா..நடிகர், நடிகைகளின் போலி முகங்கள்
மணிரத்னம் இன்று இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இயக்குனர். ஆனால், அந்த பெயர் அவர் எடுத்த வெற்றிப்படங்கள் மூலம் கிடைத்ததா என்றால் கேள்விக்குறி தான்.
ஏனெனில் மணிரத்னம் அலைப்பாயுதே படத்திற்கு பிறகு கொடுத்த வெற்றியே ஓகே கண்மணி தான். ஆனால், காலம் கடந்து இன்றைய இளைஞர்கள் பல்ஸை மணிரத்னம் பிடித்துவிட்டார்.
அதனால் தான் அதை தொடர்ந்து செக்கச்சிவந்த வானம், பொன்னியின் செல்வன் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகர், நடிகைகள் எல்லாம் எந்த படத்தில் கமிட் ஆனாலும் முதலில் பேசுவது தனக்கு வரவேண்டிய சம்பளம் தான். அதிலும் பாக்கியில்லாமல் வேண்டும் என்பார்கள்.
ஆனால், மணிரத்னம் படத்தில் கமிட் ஆனால், அவர்கள் வாங்கும் சம்ளபத்திலிருந்து பாதி தான் மணிரத்னம் தருவாராம்.
அவர்களும் எந்த குறையும் சொல்லாமல் அதை வாங்கிக்கொண்டு செல்வார்களாம், இதை பத்திரிகையாளர் பிஸ்மி சொல்ல, அட மணிரத்னம் மட்டும் என்ன உசத்தியா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
You May Like This Video