கடும் அப்செட்டில் மணிரத்னம் படக்குழு, நிம்மதியாக படம் எடுக்க விடுங்கப்பா

Vijay Sethupathi Sai Pallavi Mani Ratnam
By Tony Aug 02, 2026 07:30 AM GMT
Report

மணிரத்னம் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லா இயக்குனர்களில் ஒருவர். இவருக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் இந்தியா முழுவதும் உள்ளது. இவரின் கடைசி படமான தக் லைப் படுதோல்வி அடைந்தது.

இதனால் கண்டிப்பாக உடனே ஹிட் கொடுக்க வேண்டும் என மணிரத்னம் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

கடும் அப்செட்டில் மணிரத்னம் படக்குழு, நிம்மதியாக படம் எடுக்க விடுங்கப்பா | Maniratnam Upset Of Shooting Spot Leaked Photos

இந்த படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வர, அங்கிருக்கும் மக்கள் தினமும் எடுக்கும் காட்சிகளை எதோ Vlog போல் அவர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவேற்ற, படக்குழு இதனால் செம அப்செட்டில் இருக்கிறார்களாம்.

தமிழ் ரசிகர்கள் பலரும் முழுபடத்தையும் இப்படியே போட்டு விடாதீர்கள், அவர்களை நிம்மதியாக படம் எடுக்க விடுங்கள் என கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.