மறைந்த மாரிமுத்து கட்டிய தாலி!! மரணத்திற்கு பின்பும் அவர் மனைவி செய்தது இதுதானாம்..
சினிமாத்துறையில் பல இயக்குனர்களுடன் பணியாற்றி நடிகராக பல படங்களில் நடித்தும் பிரபலமானவர் மாரிமுத்து. சினிமாவைத் தாண்டி சில வருடங்களாக சின்னத்திரையில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வந்தார்.
அதிலும் ஏய் இந்தாம்மா என்ற அவரது வசனம் பல ஆண்டுகள் வரை மறக்க முடியாத ஒரு நினைவாக ரசிகர்கள் மத்தியில் இருக்கும்.
சில நாட்களுக்கு முன் டப்பிங் செய்து கொண்டிருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அவரே காரை எடுத்து சென்று சிகிச்சை பெற்றார்.
ஆனால் மாரிமுத்து மாரடைப்பால் மரணமடைந்தது தமிழ் ரசிகர்களை தாண்டி இந்தியா முழுவதும் டிரெண்ட்டானது.
இந்நிலையில் அவர் மறைவுக்கு பின் அவரது மனைவி செய்த செயல் தற்போது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
என் கணவர் மறைந்து போனாலும் அவரது நினைவு மறையவில்லை எங்களிடம் தான் இருக்கிறது என்றும் எனவே தாலியை நான் கழட்ட போவதில்லை என்று முடிவெடுத்துள்ளதாக அவரே தெரிவித்திருக்கிறாராம்.