காதல் போர் அடிச்சால் உடனே அதை செஞ்சிடுவோம்! விக்னேஷ் சிவன் இப்படி சொல்லிட்டாரே
விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவருமே கடந்த பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். நானும் ரௌடி தான் காலத்தில் தொடங்கிய காதல் பல ஆண்டுகள் கடந்து தற்போதும் அப்படியே இருந்து வருகிறது.
எப்போது திருமணம் என கேட்டால் மட்டும் அவர்கள் அது பற்றி வெளிப்படையாக பதில் கூறாமல் இருக்கின்றனர். இப்போது.. அப்போது.. விதவிதமான வதந்திகளும் அவர்கள் திருமணம் பற்றி பரவிக்கொண்டிருக்கிறது.
விக்கி நயன் இருவரும் கோவில் கோவிலாக சென்று பூஜைகள் சென்று வருகின்றனர். அவர்கள் பரிகார பூஜைகள் அனைத்தும் செய்து முடித்தபிறகு தான் திருமணம் செய்ய உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் அவரது காதல் பற்றி பேசி இருக்கிறார். தங்களுக்கு நடுவில் அழகான காதல் இருக்கிறது என கூறிய அவர், அந்த காதல் போர் அடித்தால் உடனே திருமணம் செய்துகொண்டு, அந்த காதலை கொண்டாடுவோம் என கூறி இருக்கிறார்.