எந்த நடிகருக்கு விவாகரத்தானாலும்..2வது திருமணம் குறித்து முற்றுப்புள்ளி வைத்த நடிகை மீனா?
நடிகை மீனா
90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகையாக இருந்து கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா. முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்த மீனா, தன் மகள் நைனிகாவையும் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். கணவர் வித்யாசாகர் மறைவு மீனாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.

தற்போது அதிலிருந்து மீண்டு வந்த மீனா, நெருங்கிய தோழிகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சூழல் இப்படியிருக்க அவர் பற்றி கடந்த சில காலமாகவே பலரும் பலவிதமான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அதாவது அரசியலுக்கு மீனா வருகிறார் என்றும் பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார் என்றும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் முதன்முறையாக வதந்திகள் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகை மீனா. அதில் என் திருமணத்தில் சிலர் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.
2வது திருமணம்
எப்போதும் என் திருமணத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் என் மகளுடன் ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் திட்டமெல்லாம் இல்லை. எந்த ஹீரோ விவாகரத்து செய்தாலும் அதை என் திருமணத்துடன் இணைத்து பேசுகிறார்கள்.
அந்த நடிகருடன் 2வது திருமணம் என்கிறார்கள். அதில் எண்ட உண்மையும் இல்லை, நான் நடிப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறேன் என்று மீனா தெரிவித்துள்ளார்.