நீலாம்பரி ரோல் நான் பண்ண வேண்டியது ரம்யா கிருஷ்ணன் இல்லை.. நடிகை ஓபன்

Rajinikanth Meena Ramya Krishnan Tamil Cinema
By Bhavya Sep 02, 2025 07:30 AM GMT
Report

படையப்பா

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 1999ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் படையப்பா.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், லட்சுமி, அப்பாஸ், நாசர், மணிவண்ணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் நீலாம்பரி கேரக்டர் ரஜினிக்கு இணையாக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இந்த கேரக்டரில் நடித்து அசத்தியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

நீலாம்பரி ரோல் நான் பண்ண வேண்டியது ரம்யா கிருஷ்ணன் இல்லை.. நடிகை ஓபன் | Meena Is First Choice Rajinikanth Popular Movie

நடிகை ஓபன் 

இந்த படம் தான் ரம்யா உச்சம் தொட காரணமாக அமைந்தது. இந்த படத்தில் அவரது கேரக்டர் பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும், இந்த கேரக்டரில் நடிக்க முதலில் தேர்வான நடிகை அவர் இல்லை.

இந்த ரோலில் முதலில் டாப் நடிகை மீனா தான் நடிக்க இருந்தார். அந்த நேரத்தில் பாசிட்டீவான கேரக்டரில் நடித்து வந்ததால், நெகடீவ் கேரக்டர் வேண்டாம் என்று முடிவு செய்து அந்த ரோலில் நடிக்கவில்லை என்று மீனா பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.  

நீலாம்பரி ரோல் நான் பண்ண வேண்டியது ரம்யா கிருஷ்ணன் இல்லை.. நடிகை ஓபன் | Meena Is First Choice Rajinikanth Popular Movie