ரூ. 10 கோடி ஆடம்பர பங்களா..ரூ. 100 கோடியை அள்ளிய நடிகை மீனா!! இப்படியொரு பிளானா?
நடிகை மீனா
தென்னிந்திய சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மீனா. டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வந்த மீனா, தற்போது த்ரிஷ்யம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மீனா குறித்து பல விஷயங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

10 கோடி ஆடம்பர பங்களா
இந்நிலையில் மீனா ஸ்மார்ட் மூவ் மூலம் 100 கோடி ரூபாய்யை அள்ளியுள்ள தகவல் பலரையும் வியக்க வைத்திருக்கிறது. நடிகை மீனா பல ஆண்டுகளுக்கு முன் சுமார் ரூ. 10 கோடிக்கு வாங்கிருந்த தன்னுடைய ஆடம்பர பங்களாவை தற்போது விற்றுள்ளார். அதுவும் ரூ.100 கோடிக்கு விற்றிருக்கிறாராம்.
நவீன கட்டடங்களுக்கு நடுவே இருந்த அந்த வீட்டினை வாங்க நெடுநாட்களாக அமெரிக்காவை சேர்ந்த ஒரு தம்பதி வாங்க ஆர்வம் காட்டி வந்துள்ளனர். தற்போது அந்த வீட்டினை அந்த தம்பதிக்கு சுமார் ரூ. 100 கோடிக்கு மீனா விற்றிருக்கிறாராம்.

இருப்பினும், இது குறித்து மீனா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருந்தாலும் சொத்து முதலீட்டில் சரியான திட்டமிடலும் பொறுமையும் இருந்தால் எவ்வளவு பலன் கிடைக்கும் என்பதற்கு மீனா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வதாக பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.