மீனா இரண்டாம் திருமணம் செய்ய போகிறாரா? மீண்டும் வெளியான புதிய தகவல்

Meena Gossip Today
By Dhiviyarajan Jan 10, 2023 08:54 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் 90-களில் பிரபல நடிகையாக இருந்தவர் மீனா. இவர் ரஜினி, கமல், அஜித், சரத்குமார் போன்ற முன்னணி நடிகருடன் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்து வந்த இவர், 2009 -ம் ஆண்டு வித்யாசகரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

சமீபத்தில் நுரையீரல் பாதிக்கப்பட்டு இருந்த வித்யாசாகர், கடந்த ஆண்டு ஜூன் 28 -ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கணவரை இழந்த துக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் மீனா, சமீபகாலமாக நடிப்பிலும் கவனம் செலுத்து வருகிறார்.

இரண்டாம் திருமணம்

இந்நிலையில் 'மீனா இரண்டாவது திருமணம் செய்ய போகிறார்' என பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது. ஆனால் இது பொய்யான தகவல் என்று முற்றுப்புள்ளி வைத்தார் மீனா.

தற்போது மீண்டும் ஒரு செய்தி பரவி வருகிறது. அதில், 'மீனாவின் குடும்ப நண்பரை திருமணம் செய்து கொள்ள போகிறார், என தற்போது தகவல் ஒன்று வெளியாகி வருகிறது. ஆனால் இந்த செய்தியும் வதந்தி என மீனாவின் தரப்பிலிருந்து கூறப்படுகிறது.