அந்த மாதிரி மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட மீனா.. கணவர் மறைவுக்கு பின் வெளிவந்த செய்தி...
90களில் ஆண்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை மீனா. இவர் திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக தொடங்கி பின்னர் பிரபல நடிகையாக மாறினார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரின் கணவர் வித்யாசாகர் உடல் நிலை குறைவால் உயிரிழந்தார்.
கணவர் இழந்த வலியிலிருந்து மீண்டு வர, மீனா தன் குழந்தை மற்றும் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். தற்போது ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1982 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் நெஞ்சங்கள்.
இப்படத்தில் சிறுவர் கதாபாத்திரத்தில் நடிக்க குழந்தை நட்சத்திரங்களை தேடி வந்துள்ளனர். அந்த நேரத்தில் சிவாஜி ஒரு விழாவில் மீனாவை பார்த்துள்ளார். அப்போது அவருக்கு இப்படத்தில் மீனாவை நடிக்க வைக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் இப்படத்தில் ஆண் கதாபாத்திரம் தான் இருந்தது.
அதனால் மீனாவை பையனை போல் முடி வெட்டிவிட திட்டமிட்டுள்ளனர். கடைசியில் படக்குழுவினர் பையன் கதாபாத்திரத்திற்கு பதிலாக சிறு பெண் கதாபாத்திரத்தை வைத்தனர்.
You May Like This Video