திருமணத்துக்கு முன் பிரபல நடிகருடன் ரகசிய திருமணமா? வதந்தியில் சிக்கிய மீனா பதிலடி..
நடிகை மீனா, ஒரு காலகட்டத்தில் ஓஹோ என தமிழ் சினிமாவில் கலக்கி வந்தார். இவர் கடந்த 2009 -ம் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற ஒரு மகளும் இருக்கிறார். கடந்த 2022 -ம் ஆண்டு மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2022-ஆம் ஆண்டு காலமானார். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஜோடி நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றியும், சில படங்களில் நடித்தும் வருகிறார் நடிகை மீனா.
கணவர் இறந்து இரண்டே மாதத்தில் மீனாவை இன்னொரு நடிகருடன் தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இரண்டாம் திருமணம் தன்னை சார்ந்தது மட்டுமல்ல என்னுடைய மகளை சார்ந்தது. இப்போதைக்கு நைனிகாதான் என் முழு கவனம். இதுவரை இரண்டாம் திருமணம் பற்றிய யோசனை எனக்கில்லை என்று மீனா கூறியிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் ஒரு நடிகருடன் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் மீனா என்ற செய்தி இணையத்தில் கசிந்து வைரலாகியது. அதாவது, மீனா, தற்போது விளம்பரங்கள், விருது விழாக்கள், சுப நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோவில் ஜட்ஜாக தலைகாட்டி வருகிறார்.
இதற்கிடையில், பிரபல நடிகர் கிச்சா சுதீப் நடிகை மீனாவை ஏற்கனவே ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் என்றும் அதன் பிறகு அவரை பிரிந்து வித்யாசாகரை திருமணம் செய்து கொண்டார் என்று வதந்தி பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகை மீனா பதிலடி கொடுத்திருக்கிறார்.
கிச்சா சுதீப்பும் நானும் நல்ல நண்பர்கள் அவ்வளவு தான் இருவருக்கும் உள்ள பழக்கம். அதைத் தாண்டி எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது என்ற தகவல்களிலெல்லாம் உண்மை கிடையாது. அப்படி ஒருவேளை எனக்கு யாருடனாவது திருமணம் நடந்தால் நானே அனைவரையும் அழைப்பேன் என்று நடிகை மீனா திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.