கமல் ஹாசனுடன் முத்தக்காட்சி!! கேரவனில் அம்மாவிடம் அழுது புலம்பிய நடிகை மீனா..
நடிகை மீனா
தென்னிந்திய சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை மீனா. தற்போது ஒருசில படங்களில் நடித்து தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
சமீபத்தில் நடிகை மீனா அளித்த பேட்டியொன்றில் ஒரு படத்தில் நடிக்கும் போது ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவ்வை சண்முகி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட போது படத்தில் ஒரு லிப்லாக் காட்சி இருப்பது பற்றி முன்பே சொல்லவில்லை.
முத்தக்காட்சி
படப்பிடிப்பு தளத்தில் உதவி இயக்குநர் இது பற்றி கூறியதும் அதிர்ச்சியடைந்தேன். கமல் ஹாசன் படம் என்றாலே ஹீரோயினை லிப்லாக் கொடுக்காமல் விடமாட்டார் என்று சொல்லுவார்களே, இதை நான் எப்படி மறந்துபோனேன் என்று எனக்கு புரியவில்லை.
அந்நேரத்தில் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியது. கேரவனில் என் அம்மாவிடம் சென்று கதறி அழுதேன், என்னால் இந்த காட்சியில் நடிக்கவே முடியாது என்று கூறியிருக்கிறார். அதன்பின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த கமல் ஹாசன், லிப் லாக் காட்சி இல்லை என்று கூறிய பின் தான் நிம்மதி பெருமூச்சு விட்டதாகவும் மீனா அப்பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.