ஆந்திர பிரதேச பிராண்ட் தூதரான மீனாட்சி சௌத்ரி? அதிர்ச்சியில் வெளியான தகவல்..
மினாட்சி செளத்ரி
கடந்த ஆண்டு பல முக்கிய படங்களில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தவர் நடிகை மினாட்சி செளத்ரி. கோட், குண்டூர் காரம், லக்கி பாஸ்கர், சங்கராந்திக்கு வருணாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். அதன்பின் சித்திர புத்திரி என்ற சாய் அபியங்கரின் ஆல்பம் பாடலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.
தற்போது மீனாட்சி செளத்ரி, ஒரு போலி செய்தியில் சிக்கியுள்ளார். அதானது மீனாட்சி செளத்ரி ஆந்திர பிரதேச அரசு, பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததாக செய்திகள் வெளியானது. இந்த செய்தியால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
சமந்தா, பூனம் கவுர் போன்ற நடிகைகளை அரசுகள் ஏற்கனவே பிராண்ட் அம்பாசிடராக நியமித்திருந்தன. அதேபோல் மீனாட்சிக்கும் வாய்ப்பு கிடைத்ததாக செய்திகளில் போடப்பட்டுள்ளது.
இது இணையத்தில் டிரெண்ட்டாக, ஆந்திர பிரதேச அரசிலுள்ள உண்மை சர்பார்ப்பு பிரிவில் இந்த செய்திகளை மறுத்துள்ளது. மீனாட்சி செளத்ரியை பிராண்ட் அம்பாசிடராக நியமித்ததாக கூறி வரும் செய்திகள் பொய் என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.