ஏங்கே...இது பொண்ணே இல்லங்க!! இந்தியாவின் முதல் AI நடிகை நைனா அவ்தார்..
இன்ஸ்டாகிராமில் தற்போது நடிகைகள், இளம்பெண்கள் முதல் வயதானவர்கள் கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து காசு பார்த்து வருகிறார்கள். பெண்கள் தான் இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் பலரும் AI மூலம் எடிட் செய்து கிளாமர் போட்டோக்களையும் பகிர்ந்து ஷாக் கொடுக்கிறார்கள்.
அந்தவகையில் இந்தியாவின் முதை ஏஐ சூப்பர் ஸ்டார் என்று தன்னைத்தானே பட்டம் கொடுத்துக்கொண்டு உருவாகியுள்ளது AI நடிகை நைனா அவதார்.

AI நடிகை நைனா அவதார்
பார்க்க அச்சு அசல் பாலிவுட் ஹீரோயின் போலவே இருக்கும் நைனா அவதார், பெண்ணே கிடையாதாம். ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு விதவிதமான கிளாமர் உடையில் டிசைன் செய்யப்பட்டு டிரெண்ட்டாகி வருகிறார் இந்த நடிகை. நைனா அவதார் வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளாராம்.
அதுவும் இல்லாமல் பிரபல ஊடக சேனலுக்கு பேட்டியளித்தும் இருக்கிறார். இந்த ஏஐ நடிகையை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாலோ செய்து வருகிறார்கள் என்பதுதான் அதிர்ச்சிகரமான விஷயம்.