என்னது தமிழக முதலமைச்சருக்கே கொரோனாவா!! 2 டோஸ் தடூப்பூசி போட்டும் கோவிட்19?

COVID-19 M K Stalin
By Edward Jul 12, 2022 12:15 PM GMT
Report

இந்தியாவில் சமீபகாலமாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது அதிதீவிரமாக விட்டதால் அந்தந்த மாநிலங்களில் முகக்கவசம் மற்றும் சாணிடைசரை பயன்படுத்த வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா குறித்த செய்தியை முதலமைச்சர் அவரது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதில், இன்று உடற்சோர்வு சற்று இருந்ததாகவும், பரிசோதித்ததில் கோவிட்19 உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளர். தற்போது தனிமைப்படுத்திக்கொண்டதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு பாதுகாப்பாய் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதனை பலர் எவ்வளவு பாதுகாப்பாய் இருக்கும் முதலமைச்சருக்கே கொரோனா வந்துவிட்டது. சாதாரண மக்களுக்கு சீக்கிரமே பரவி விடுமே என்று கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் சீக்கிரம் குணமடைய வேண்டி கருத்துக்களை கூறியும் வருகிறார்கள்.