உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த..ஆனா நடிகர்களுக்கு!! நடிகை ருக்மணி ஓபன் டாக்..

Actors Tamil Actress Rukmini Vasanth
By Jai May 08, 2026 08:30 AM GMT
Report

ருக்மணி வசந்த்

நடிகை ருக்மணி வசந்த், கன்னடத்தில் வெளிவந்த சப்த சாகரதாச்சே எல்லோ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தவர். அதை தொடர்ந்து, தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஏஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த..ஆனா நடிகர்களுக்கு!! நடிகை ருக்மணி ஓபன் டாக்.. | Models Face More Challenge Than Actors Rukmini

இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. பின் ருக்மணி வசந்த் நடிப்பில் மதராஸி திரைப்படம் வெளியானது. இப்படத்தில் ருக்மணி வசந்த் நடிப்பை அனைவரும் பாராட்டி வந்தனர்.

ருக்மிணி வசந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. தற்போது டாக்ஸிக், டிராகன் என்ற தெலுங்கு படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த..ஆனா நடிகர்களுக்கு!! நடிகை ருக்மணி ஓபன் டாக்.. | Models Face More Challenge Than Actors Rukmini

மாடல்களுக்கு

சமீபத்தில் அவர் பேசுகையில், நடிகர்கள் பஞ்ச் வசனங்கள் பேசியும், ஆக்ஷன் காட்சிகளில் நடித்தும் சமாளிக்கலாம், ஆனால் மாடல்களுக்கு அந்த சலுகையில்லை.

ஒரு வார்த்தைகூட பேசாமல் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த வேண்டும், அதுதான் மாடல் அழகிகளுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால். இன்றளவும் சினிமாவில் நான் தொடர்ந்து கற்றுக்கொண்டு வரும் விஷயம் அதுதான் என்று கூறியிருக்கிறார்.